Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வடமாகாணத்தின் அரசியல் நிர்வாக கட்டமைப்புக் கொண்ட தளமாக மாங்குளம் மாற்றப்படவேண்டும் எனக் கூறப்பட்ட போதும், அது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாணத்தின் கலாசார தளமாக யாழ்ப்பாணத்தையும் அரசியல் நிர்வாக கட்டமைப்புக் கொண்ட தளமாக மாங்குளத்தையும் மாற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகளை வடமகாண சபை மேற்கொள்ளவில்லை.
வடமாகாணத்தின் அனைத்து திணைக்களங்களும் யாழ்ப்பாணத்தில், சிறிய ஒழுங்கைகளுக்குள் அமைந்துள்ளன. அலுவலகங்களை தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது. மாங்குளத்தை நிர்வாக தளமாக மாற்றினால் திணைக்களங்கள், அலுவலகங்களை அங்கு நிறுவுவதன் மூலம் இடநெரிசலைக் குறைக்க முடியும்.
கடந்த அரசாங்கமும் மாங்குளத்தை வடமாகாணத்தின் மையமாக அபிவிருத்தி செய்ய முயற்சிகளை மேற்கொண்டது. அதனை இந்த அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும்.
வடமாகாண சபை, திணைக்களங்கள் போன்றவற்றுக்கான காணிகளை தெரிவு செய்து, அவற்றை கையகப்படுத்தி திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago