2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மோட்டார் சைக்கிளில் முதியவரை மோதியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், பொஸ்கோ சந்தியில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபரை, எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், இன்று செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.

மேற்படி சம்பவத்தில் ஏ - 9 வீதி கச்சேரியடியைச் சேர்ந்த கந்தையா தர்மநாயகம் (வயது 70) என்பவர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்துப் பொலிஸார் எஸ்.ஸ்ரீகணேசன், எஸ்.பிரசாந்தன் ஆகியோர் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து, மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவரை திங்கட்கிழமை (02) இரவு கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X