2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

தெல்லிப்பழை, மதவடிப் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை (07) மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.டி.எஸ்.பிரியந்த தெரிவித்தார்.

இளவாலை பகுதியைச் சேர்ந்த ஜே.திலீப்குமார் (வயது 33) என்பவர் உயிரிழந்ததுடன், சருண் (வயது 26) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி, அருகிலிருந்த கடைக்குள்ளும் புகுந்துள்ளது.

உயிரிழந்தவர், தனது சகோதரியில் திருமண நிகழ்வுக்காக இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X