Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 27 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.நவரத்தினராசா
யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டு 47.5 மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக மாவட்டச் செயலகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறல், புதுப்பித்தல் நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் ஜனவரி மாதம் 35 இலட்சத்து 8 ஆயிரத்து 550 ரூபாயும் பெப்ரவரி மாதம் 38 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாயும், மார்ச் மாதம் 40 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், ஏப்ரல் மாதம் 33 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாயும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
இதேபோல் மே மாதம் 31 இலட்சத்து 85 ஆயிரத்து 850 ரூபாயும், யூன் மாதம் 34 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாயும், யூலை மாதம் 40 இலட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாயும், ஓகஸ்ட் மாதத்தில் 39 இலட்சத்து 59 ஆயிரத்து 300 ரூபாயும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் 50 இலட்சத்து 41 ஆயிரத்து 150 ரூபாயும் ஒக்டோபர் மாதத்தில் 46 இலட்சத்து 10 ஆயிரத்து 350 ரூபாயும், நவம்பர் மாத்த்தில் 34 இலட்சத்து 32 ஆயிரத்து 700 ரூபாயும், டிசெம்பர் மாதம் கூடிய தொகையாக 50 இலட்சத்து 2 ஆயிரத்து 900 ரூபாயும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago