Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 30 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.அரசரட்ணம்
'வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர்போன இடமாக விளங்கும் மாதகல் கடற்கரையில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்ரன் ஜோன்ஸன் கோரியுள்ளார்.
'பொலிஸ் காவலரண் அமைப்பதற்கு சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அவர் வழியுறுத்தியுள்ளார்.
'இந்தியாவிலிருந்து மீன்பிடி வள்ளங்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் மாதகல் கடற்கரையூடாக நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் தற்பொழுது குற்றச்செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்த வண்ணமிருக்கின்றன. எனவே, போதைப்பொருள் பாவனையிலிருந்து மக்களைக்; காப்பாற்றும் நோக்குடனும் போதைப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் மாதகல் கடற்கரையில் பொலிஸ் காவலரண் அமைக்கப்படவேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .