2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மைத்துனரை வீட்டுக்கு அழைத்துச் சென்று கோடாரி கொத்து

George   / 2016 ஜனவரி 22 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தனது மைத்துனனை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை கோடாரியால் கொத்திய சம்பவம் குப்பிளான் வடக்கில், வியாழக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், தனது மனைவியின் தங்கையின் அலைபேசியிலிருந்து தனக்கு அழைப்பொன்று வந்ததாக மனைவியின் தங்கையின் கணவரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அதனை மறுத்த அவர் அழைப்பு வந்ததைக் காட்டுமாறு கூறியுள்ளார்.

அலைபேசியில் இருக்கும் அழைப்பைக் காட்டுவதற்காக மனைவியின் தங்கையையும், அவருடைய கணவரையும் அவர்; தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியின் தங்கையின் கணவரை கோடாரியால் கொத்தியுள்ளார்.

இது தொடர்பில் கொத்து வாங்கியவரின் மனைவி, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X