2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் முதியோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள முதியோர்களுக்கான இலவச மருத்துவ சேவை முகாம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(22) காலை 10 மணிக்கு இத்தாவில் கிராம சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறமுடியாமல் கிராமங்களில் இருக்கும் முதியவர்களுக்கே இந்த மருத்துவ சேவை நடத்தப்படுவதாக இத்தாவில் கிராம முதியோர் சங்க தலைவர் சி.சபாரட்ணம் தெரிவித்தார்.

அண்மையில் கரைச்சியில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் கிராமத்திலும் இந்த மருத்துவ சேவை முகாம் நடத்தப்பட்டு, அதில் 59 முதியவர்கள் பயன்பெற்றனர்.

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி மாசிலாமணி ஜெயராசா, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முதியோர் சங்கங்களின் வேண்டுகோளின் பேரின் இந்த மருத்துவ சேவையை நடத்த முன்வந்துள்ளார்.

இதனால், மருத்துவ சேவையை நடத்த விரும்பும் முதியோர் சங்கங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக சமூக சேவை அலுவலர்கள் ஆகியோருடன் தொடர்புகொண்டு மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X