2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முதிரை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முதிரை மரக்குற்றிகளை பட்டா ரக வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபரை ஏ - 9 வீதி கொக்காவில் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (13) விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

வாகனத்திலிருந்து 24 முதிரை மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டன.

கொக்காவில் ஐயன்குளம் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரும், சான்றுப் பொருட்களும் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X