2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மாந்தை கிழக்கு பிரதான வீதிகள் புனரமைக்கப்படவில்லை

Gavitha   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தின் பிரதான வீதி முதல், ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்த வீதிகளும் இதுவரை புனரமைக்கப்படாமையினால், இவ்வீதிகளை பயன்படுத்தும் அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வரவேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்;தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில், 2,867க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 9,508 பேருக்கும் மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பிரதேசத்துக்கான  எந்தவொரு வீதியும் புனரமைக்கப்படவில்லை.

குறித்த பிரதேசத்துக்கான பிரதான வீதியாக காணப்படும் வன்னிவிளாங்குளம் நட்டாங்கண்டல் வரையான 18 கிலோ மீற்றர் நீளமான வீதி, பகுதி பகுதியாக வீதி அபிவிருத்தி திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம், பிரதேச சபை ஆகிய மூன்று திணைக்களங்;களுக்குச் சொந்தமான வீதியாக காணப்படுவதுடன் மூன்று திணைக்களங்களும் இதனைப் புனரமைப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இப்பிரதேசத்துக்கான பிரதான வீதியை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்;துள்ளனர்.

மாந்;தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட 18 வீதிகள் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன் இவற்றை புனரமைப்பதற்கு ஆயிரத்து 642.5 மில்லியன் ரூபாய் தேவையென உள்ளூராட்சி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X