2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மீன்பிடிக்கச் சென்ற மூதாட்டி சடலமாக மீட்பு

Niroshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

தனங்கிளப்பு கடல்நீரேரில் மீன்பிடிக்கச் சென்ற வயோதிப பெண், செவ்வாய்க்கிழமை (15)  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தசாமி கமலாதேவி (வயது 55) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீன்களைப் பிடிப்பதற்காக மாலை நேரத்தில் வலையை விரித்துவிட்டு மறுநாள் காலையில் வலையில் அகப்பட்ட மீன்களை எடுத்துவரும் தொழிலை இந்த மூதாட்டி செய்து வந்தார்.

இவ்வாறு செவ்வாய்க்கிழமை (15) மாலை வலை விரிக்கச் சென்ற குறித்த மூதாட்டி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து, சந்தேகம் கொண்ட குடும்பத்தார் கடல்நீரேரிக்குச் சென்று பார்த்த போது அவர் அங்கு உயிரிழந்திருந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X