2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மீன் விற்று வீடு திரும்பியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

George   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மோட்டார் சைக்கிள் மோதி காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மீன் வியாபாரி, சனிக்கிழமை (29) மதியம் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீன்விற்றுவிட்டு மன்னார் பாலத்தில் இருந்து, வீடு சென்றுக்கொண்டிருந்த வியாபாரியின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், அவரை மோதியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், பனங்கட்டுகொத்து பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் பிறான்சிஸ் (வயது68) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “மன்னார் பாலத்துக்குக் கீழ், சிறு மீன்பிடியில் ஈடுபடும் குறித்த நபர், வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக மோதியுள்ளது. தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளானவரை, வீதியில் சென்றவர்கள் மீட்டு  மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர்  இரவு 11:30 மணியளவில், மேலதிக சிகிச்சைக்காக  யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையின் திடிர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X