2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மிரட்டிய சட்டத்தரணிக்குப் பிணை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய சட்டத்தரணியை 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில் செல்ல, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், இன்று செவ்வாய்க்கிழமை (13) அனுமதியளித்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சட்டத்தரணி, பிறிதொரு சட்டத்தரணியூடான மன்றில் இன்று ஆஜராகிப் பிணை கோரினார்.

மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிஸாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் அடிப்படையில் மிரட்டியதாகக் கூறப்படும், சட்டத்தரணிக்கு எதிராக கடந்த 2ஆம் திகதி மல்லாகம் நீதவானால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பிடியாணையைச் இரத்துச் செய்யுமாறு மேற்படி சட்டத்தரணி மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். எனினும், அந்த மனுவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X