Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பில் நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள 'நியூ பீனிக்ஸ்' முல்லைத்தீவு மாற்றுத்திறனாளிகள் கணினி நிலையத்திற்கு ஒருதொகுதி கணினிகளுக்கான கதிரைகள் வழங்கும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை (26) மாலை யாழில் உள்ள அமைச்சரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிலையம் முல்லைத்தீவு 'நியூ பீனிக்ஸ்' மாற்றுத்திறனாளிகள் சங்கத்தால் திறந்துவைக்கப்படவுள்ள நிலையில், ஒருதொகுதி கதிரைகளை 2016 ஆம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்து, குறித்த அமைப்பின் தலைவர் அவர்களிடம் கையளித்தார் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், குறித்த கணினி நிலயத்தினூடாக பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் போராளிகளின் பிள்ளைகள் ஆகியோர் கணினி அறிவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இவ்வாறான மாற்றுவலுவுள்ளோரை வலுவூட்ட என்னாலான சகல உதவிகளையும் செய்வேன் என்று குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago