2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் இலவச மின்சார இணைப்பு

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்,   மின்சாரம் பெறாத குடும்பங்களுக்கு இலவசமாக மின்சார இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் ஜமால்தீன் ரிசாம் சனிக்கிழமை (31) தெரிவித்தார்.

'கடந்த அரசாங்கத்தினால் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டு வந்த மின்சார விநியோகம், கடந்த ஜூலை மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சாரம் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு மின்விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மற்றும் மின்சக்தி அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்தோம்.

அவ்வாறு வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீண்டும் மின்சார இணைப்பு வழங்காவிட்டாலும் அதற்கு பதிலாக மாற்றீடு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்' என்று அவர் கூறினார்.

எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மின்சாரம் பெறாத குடும்பங்களுக்கு, இலவசமாக மின்விநியோகத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பிரதி மின்சக்தி அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த திட்டங்கள் யாவும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்சாரமற்ற சகல குடும்பங்களும் தமது கிராம சேவகரினூக விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின்சாரத்துக்காக விண்ணப்பித்தவர்களும் குறித்த புதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்சாரமில்லாத சகல கிராமங்களுக்கும் மின்சாரத்தை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதி மின்சக்தி அமைச்சர் அஜித் பி. பெரேராவிடம் கோரிக்கையொன்றை விடுத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X