Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
யுத்தம் மற்றும் விபத்துக்களால் அவயங்களை இழந்த நிலையில் 2,151 மாற்றுத்திறனாளிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருப்பதாக மாவட்ட புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 480 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 764 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 377 பேரும், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 188 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் 267 பேரும், வெலிஓயா பிரதேசத்தில் 75 பேரும் உள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது.
இவர்களில் அதிகமானவர்கள் குடும்பத் தலைவர்களாகக் காணப்படுகின்றனர்.
அவயவயங்களை இழந்தவர்களின் தொகை அதிகளவில் இருப்பதாக பல்வேறு அமைப்புக்கள் மூலம் மாறுபட்ட புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி 2,151 மாற்றுத்திறனாளிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago