Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
'யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில் 11 ஆயிரத்து 319 குடும்பங்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். மீள்குடியேறிய குடும்பங்களில் 8 ஆயிரத்து 629 குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகள்; செய்து கொடுக்கப்படவேண்டும்' என யாழ். மாவட்ட காணி மேலதிக செயலர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பாக வடமாகாண சபையுடனான கலந்துரையாடல், யாழ். மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்றது.
மீள்குடியேறிய மக்கள் மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள மக்களின் தேவைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் அதிக முக்கியத்துவப்படுத்தப்பட்டு பேசப்பட்டது.
விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேறிய பகுதிகள் மற்றும் விடுவிக்கப்பட்டு மக்கள் இன்னமும் மீள்குடியேறாத பகுதிகள் ஆகியவற்றில் 31 ஆயிரத்து 116 மலசலகூடங்கள் அமைக்க வேண்டியுள்ளதாக காணி மேலதிக செயலரால் கூறப்பட்டது.
இதனைவிட, மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள 197 கிலோமீற்றர் வீதி வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழுள்ள 275 கிலோமீற்றர் வீதி, உள்ளுராட்சி மன்றங்களின் கீழுள்ள 627.5 கிலோமீற்றர் வீதி என்பன புனரமைக்க வேண்டியுள்ளதாக காணி மேலதிக செயலர் சுட்டிக்காட்டினார்.
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றம், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் தற்போதய நிலைமைகள் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறியவர்களில், உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீள்குடியேறியவர்கள் மற்றும் இந்தியாவுக்குச் சென்று வந்து மீண்டும் வந்து மீளக்குடியேறியவர்கள் என இரண்டு பகுதியினர் அடங்குகின்றனர்.
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago