2025 ஜூலை 21, திங்கட்கிழமை

முள்ளியவளை - குமுளமுனை வரையான வீதியை புனரமைக்க நடவடிக்கை

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட முள்ளியவளையில் இருந்து குமுளமுனை வரை செல்லும் வீதியை புனரமைத்துத் தருவதாக வட மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

13 கிலோமீட்டர் வீதியை புனரமைக்குமாறு அங்குள்ள மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சனிக்கிழமை(19) மாலை முள்ளியவளைக்கு நேரில் விஜயம் செய்த அமைச்சர் பா.டெனிஸ்வரன் மேற்படி வீதியின் தற்போதைய நிலையை அவ்வீதி வழியாக சென்று பார்வையிட்டதோடு அடுத்த ஆண்டு தமது வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக இந்த வீதியை மக்கள் போக்குவரத்துக்கு உகந்த வகையில் புனரமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .