2025 டிசெம்பர் 06, சனிக்கிழமை

யாழில் சைக்கிள்களை திருடிய 4 பேர் கைது

Editorial   / 2025 டிசெம்பர் 06 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர் கைதுசெய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 12 சைக்கிள்களை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X