Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஒக்டோபர் 28 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே வினோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் வைத்து , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் யாழ், போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் , 'தன் மீது ஆவா வினோதன் தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடாத்தினார்கள்' என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தான்.
அதன் அடிப்படையிலையே வினோதன் கைது செய்யப்பட்டு , விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். (R)
7 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
56 minute ago
1 hours ago