2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கொரோனா நோயாளியை காணவில்லை

Editorial   / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

காய்ச்சல் காரணமாக கடந்த 16ஆம் திகதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்நபருக்கு, அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நோய் தீவிரமடைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மறுநாள் 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவரது மனைவி சென்று பார்த்தபோது கணவனை அங்கு காணவில்லை.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X