2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் சகல பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ்  நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையும் நேற்று மாலையிலிருந்து இரத்துச் செய்ய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ் மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளின் கீழ் கடந்த சில வாரங்களாக யாழில் இடம்பெற்ற குற்றங்களை தடுப்பது மிகவும் குறைந்துள்ளதுடன், பொலிஸாரின் பலவீனமான நடவடிக்கைகளும் குற்றங்களைத் தடுக்க முடியாமைக்கான காரணம் எனத் தெரிவித்து, இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளின் விடு​முறைகள் இரத்துச் செய்யப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில், யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான பொலிஸார் அதிருப்தியடைந்துள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X