2025 மே 16, வெள்ளிக்கிழமை

யாழில் நாளை மின்தடை

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு, கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணம் குடாநாட்டின் சில பகுதிகளில், நாளை (11) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென, இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை யாழ்., பிறவுண் வீதி, அரசடி வீதியில் ரயில் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரை, கே.கே. எஸ் வீதியில் நாச்சிமார் கோவிலிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடிச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிச் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச் சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஓட்டுமடம் சந்தியிலிருந்து கே.கே. எஸ் வீதி வரை, அசாத் வீதி, வி.ஏ தம்பி லேன், பிரப்பங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி, கன்னாதிட்டி, கன்னாதிட்டி கார்கில்ஸ் பூட் சிற்றி, மணிக்கூட்டு வீதி, சிவன்- பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி, ஹரிகரன் அச்சகம்  பிறைவேற் லிமிற்ரெட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ரபிறைசஸ் பிறைவேற் லிமிற்ரெட், எவர்கிறீன் அச்சகம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .