Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜனவரி 03 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ். மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய வருமாறு, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காலை கட்சி ரீதியாக உறுப்பினர்களை சந்திக்கும் நோக்குடன் , ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு நேரம் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரினால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் சபை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது. அதனை திருத்தங்களுடன் சபையில் சமர்ப்பிக்காது 31ஆம் திகதி நள்ளிரவுடன் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டார்.
புதிய முதல்வருக்கான தெரிவு மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் பிராகாரம் நடத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் , அது தொடர்பில் ஆலோசனைகளை பெற சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையிலேயே யாழ். மாநகர சபை உறுப்பினர்களை தனித்தனி கட்சி ரீதியாக சந்திப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago