Janu / 2024 மே 14 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, விபத்துக்கு உள்ளான சம்பவம் திங்கட்கிழமை (13) இடம்பெற்றுள்ளது .
ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது , நாரந்தனை பகுதியில் வைத்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால் , பின்னால் பயணித்த சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து அதில் மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
அதனையடுத்து, சிறைச்சாலை பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு , சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .
எம்.றொசாந்த்

31 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
11 Jan 2026