2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலைக்கழக கட்டடங்கள் திறப்பு

Editorial   / 2017 ஜூன் 30 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதி மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் ஆகியவற்றை, பல்லைக்கழகத்திடம் கையளிக்கும் வைபவம் வெள்ளிக்கிழமை (30) கிளிநொச்சி அறிவியல் நகரில் நடைபெற்றுள்ளது.

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்;ஸ்மன் கிரியெல்ல இலங்;கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித்சிங் ஆகியோரால் வைபவரீதியாக இக்கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு, இலங்கை - இந்திய அரசாங்;கங்;களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் கீழ், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இக்கட்டடங்கள் சுமார் 550 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடங்களுக்குத் தேவையான ஒரு தொகுதி இயந்திர சாதனங்களையும் ஆய்வுகூட உபகரணங்களையும், தளபாடங்களையும் பெற்றுக்கொடுக்கவும் இப்பீடங்;களுக்கு சில வாகனங்களை பெற்றுக்கொடுக்கவும், இவ்வொப்பந்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X