Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா
யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள சி.ரி ஸ்கானர் பழுதடைந்துள்ளதால், நோயாளர்களுக்கான சி.ரி ஸ்கான் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கடந்த 8 வருடமாக பயன்படுத்தப்பட்ட சி.ரி.ஸ்கானர் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், நோயாளர்களை வவுனியா மற்றும் ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
புதிய சி.ரி ஸ்கானர் பெற்றுக்கொள்வதற்கான வழிகள் தற்போது வைத்தியசாலை நிர்வாகத்திடம் இல்லை. அதேவேளை, புதிய சி.ரி.ஸ்கானர் வழங்குவதாக மத்திய சுகாதார அமைச்சு உறுதியளித்திருந்தாலும், அதனை மத்திய சுகாதார அமைச்சு உடனடியாக வழங்குவதாகவும் இல்லை.
இவவியந்திரத்தை கொள்வனவு செய்ய 75 மில்லியன் முதல் 100 மில்லியன் ரூபாய் வரை தேவை. வெளிநாட்டு அன்பளிப்பாளர்கள் உதவி செய்தால், யாழ்.போதனா வைத்தியசாலைக்கான புதிய சி.ரி.ஸ்கானர் ஒன்றினைக் கொள்வனவு செய்ய முடியும்.
இந்நிலையில், தனியார் வைத்தியசாலைகளில் சி.ரி.ஸ்கான் ஒன்று செய்வதற்கு சுமார் 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை தேவை. இந்நிலையில் நோயாளர்களின் நலன் கருதி ஏனைய வைத்தியசாலைகளை நாட வேண்டியுள்ளது. எனவே, அரசாங்கம் உரிய நேரத்தில் இந்த சி.ரி ஸ்கானரை வழங்க ஆவண செய்ய வேண்டுமென யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .