2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் 40 பேருக்கு டெங்கு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 10 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் இந்த ஆண்டின் முதல் வாரத்தில் 40 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபை எல்லைக்குள் 569 பேர் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதில் நவம்பர் மாதம் 40 பேரும், டிசம்பர் மாதம் 173 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு 905 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தனர். அந்த வருடத்துடன் ஒப்பிடும் போது கடந்த வருடம் நோய் தாக்கத்துக்கு உள்ளானோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இவ்ஆண்டின் முதல் வாரம் 40 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் டெங்கு நுளம்பை கட்டுபடுத்தும் செயற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பவற்றை தீவிரமாக தாம் முன்னெடுத்து உள்ளதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X