Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா
யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கேபிள் இணைப்புக்களை அகற்றியமை தொடர்பாக யாழ் மாநகர மேயர் இ.ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கேபிள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர மேயரால் அகற்றப்பட்டிருந்தன.
கேபிள் கம்பங்களை நாட்டிய நிறுவனத்தினரால் யாழ் மாநகர மேயருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து மேயரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர். அவர் விசாரணைக்கு சமூகமளிக்காத காரணத்தால், இன்று (16) பொலிஸாரால் யாழ்ப்பாண மாநகரசபை மேயர் அலுவலகத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .