2025 மே 05, திங்கட்கிழமை

’யாழ். மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள்’

Niroshini   / 2020 நவம்பர் 23 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களென, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.

தற்போதைய யாழ். மாவட்ட நிலைமை தொடர்பில் இன்று (23) கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ஏனைய மாவட்ட மக்களை விட யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களென்றார்.

குறிப்பாக தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கின்ற போது, அவற்றை சரியாக கடைப்பிடித்து வீடுகளில் இருக்கின்றார்களெனத் தெரிவித்த அவர், யாழ். மாவட்ட மக்கள் குறித்த சுகாதார நடைமுறையை தொடர்ச்சியாக பேணுவதன் மூலம், கொரோனாவில் இருந்து தமது மாவட்டத்தைக் காப்பாற்ற முடியுஅமனவும் கூறினார்.

மேலும், தென்னிந்தியாவில் இருந்து வடபகுதிக்கு  சட்டவிரோதமாக வருவோர் மற்றும் சட்டவிரோதமாக பொருள்களைக் கொண்டு வருவோர் தொடர்பிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென, இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X