Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களால் நடத்தப்பட்ட கலாசார ஊர்வல பவனி, புதன்கிழமை (09) இடம்பெற்றது.
பாடசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம், தட்டாதெரு சந்தியை அடைந்து, கே.கே.எஸ் வீதி வழியாக சிவன் கோவில் சந்தியை அடைந்து, அங்கிருந்து கஸ்தூரியார் வீதிக்கு சென்று, தொடர்ந்து நாவலர் வீதியூடாக பிறவுண் வீதிக்குச் சென்று அங்கிருந்து மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது.
இந்த ஊர்வலத்தில் புலியாட்டம், கரகாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம் என பல கிராமிய நடனங்களை மாணவர்கள் ஆடியதுடன் பாடசாலையின் சாதனைகளை வெளிப்படுத்தும் வெற்றிக் கேடயங்களைத் தாங்கியவாறும் சென்றனர்.
ஊர்வலத்தில் பாடசாலையின் ஆசிரியர், மாணவர்களுடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியர், மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
44 minute ago