Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாநூ கார்த்திகேசு
இலங்கை சாரணிய சங்கத்தினால் நடத்தும் 9ஆவது ஜம்போறி நிகழ்வு, இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஜம்போறி நிகழ்வில் யாழ்ப்பாணம் நகரசபை விளையாட்டரங்கு உட்பட அதனை அண்டிய பகுதிகளில் 20ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சாரணிய இயக்கத்தின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சாரணிய இயக்கத்தின் தலைவர் நிமால் டீ சில்வாவினால் இவ்வறிவிப்பு வழங்கப்பட்டது.
22ஆம் திகதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்ப்பாண சாரணிய இயக்கத்தின் 100ஆவது ஆண்டு விழாவும் இத்தினத்திலேயே கொண்டாடப்படவுள்ளது.
பரீட்சையை மாத்திரம் மையமாகக் கொண்டு இயங்கும் இலங்கையின் கல்வித்திட்டத்திலிருந்து மாணவர்களின் ஆளுமைவிருத்தி மற்றும் மத, கலாசார ரீதியான நற்புறவினை இச்சாரணிய இயக்கம் இதுவரை நாட்டில் மேற்கொண்டுவந்துள்ளது.
இலங்கையில் முதன்முதலில் சாரணிய இயக்கம் 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், முதலாவது ஜம்போறி நிகழ்வானது 1952ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து 1982ஆம் ஆண்டு அநுராதபுரம், குருநாகல், கண்டி, பலப்பிட்டிய மற்றும் அங்குணுகொலபலஸ்ஸை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள 9ஆவது ஜம்போறி நிகழ்வில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சாரணர்கள் 10,000 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தியா, பங்களாதேஷ், மாலைத்தீவு, பாகிஸ்தான், நேபாளம், தாய்வான், ரீனிடாட் மற்றும் டெபகோ ஆகிய நாட்டை சேர்ந்த அங்கத்தவர்களும் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
52 minute ago
59 minute ago