Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், நகர்ப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (15) இரவு இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயுதங்கள் தரித்த பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (16) இரவு முழுவதும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம், முலவைச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, ஆரியகுளம் சந்தி உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு குழுக்கள் சண்டையிட்டுள்ளனர். முகத்தை கறுப்புத் துணியால் கட்டியபடி இவர்கள் சண்டையிட்டுள்ளதுடன் இதில் வான் ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரான்லி வீதியில் கடையொன்றின் முன்னால் நின்றிருந்த மூவர், கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி, வாள்வெட்டுக்கு இலக்காகி;யிருந்தனர். இதனைத் தொடர்ந்து, முலவைச் சந்தியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கடந்த 5ஆம் திகதி இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்தச் சம்பவங்களையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்தும் கைகலப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago