2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளைச் சுமூகமாக ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்ட குழுவினர் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்புக்கு அழைத்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் கடந்த ஜூலை 16ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பு காரணமாக மூடப்பட்டு, இன்னமும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் விஞ்ஞானபீடம், கலை, வணிக முகாமைத்துவ பீடங்களின் சில பிரிவுகளை, மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

மருத்துவபீடம், விவசாய பீடம், சித்த மருத்துவப் பீடம், கலைப்பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள், வணிக முகாமைத்துவப் பீட மாணவர்களின் முதலாம் மற்றும் இறுதியாண்டு கல்விச் செயற்பாடுகள் என்பன, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X