2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்துக்கு தேர்தல் ஆணையாளர் நாளை வருகிறார்

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நாளை வெள்ளிக்கிழமை (04) யாழ்ப்பாணத்துக்கு  விஜயம் செய்யவுள்ளதுடன், தென்மராட்சி கல்வி வலயத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

தென்மராட்சி கல்வி வலயத்தின் மாணவர் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் பற்றி விடயங்களை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையாளர் இங்கு வருகின்றார்.

மாணவர் நாடாளுமன்றத்தால் இதுவரையான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பிலான விடயங்கள், மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X