2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

யாழ்ப்பாணத்துக்கு போக்குவரத்துப் பொலிஸார் 150பேர் தேவை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து முறைகளை சீராக மேம்படுத்த இன்னமும் 150 போக்குவரத்துப் பொலிஸார் தேவையாகவுள்ளனர். புதிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை உள்வாங்கினால் அவர்களை தங்க வைப்பதற்கு இடம் இல்லை' என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜீ.கே.பெரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற சிவில் சமூகக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'போக்குவரத்துப் பொலிஸாருக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றது. நிரப்புவதற்கும் பொலிஸ் நிலையங்களில் இடவசதி போதாது. அதேவேளை, பெண் பொலிஸார்களும் தேவையாகவுள்ளது. பொலிஸாருக்கு போதிய இடங்கள் வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X