2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி

George   / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளாகவிருந்து உயிர்நீர்த்த மாவீரர்களின் நினைவு தினமான இன்று வெள்ளிக்கிழமை(27), யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, வளாக மத்தியில் அமைந்துள்ள சுற்றுவட்டத்திலும் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .