2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். பிரதான சந்திகளில் புதிதாக ஒளிரும் சமிக்ஞை விளக்குகள்

George   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் நகரப்பகுதிகளில், வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், வீதி ஒழுங்குமுறைகளை சரியாகப் பேணி, வீதிப் போக்குவரத்தை இலகுபடுத்தி, விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன், வீதி அதிகார சபையினால் யாழ். பிரதான சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் தற்போது வாகன கொள்வனவுகளும் அதனை பாவனையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், அதிகரித்துக் காணப்படும் வாகனங்களுக்கு ஏற்ப, வீதிகளின் அகலம் போதுமானதாக இல்லை இதனால் யாழ். நகரம் முழுவதும் வாகன நெரிசலால் தினமும் போக்குவரத்து சீரற்று காணப்படுகிறது.

போக்குவரத்துப்  பொலிஸார் கடமையில் இருந்தும் போக்குவரத்து கட்டுப்பாடு என்பது நேர்த்தியாக இடம்பெறுவதில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ். சத்திரச்சந்தியில் இருந்த திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு குறித்த சந்தியில் முதலாவது சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டது.

இந்த முயற்சி வெற்றியளித்ததை தொடர்ந்து இரண்டு வருடங்களின் பின்னர், தற்போது யாழ். நகரப்பகுதியை அண்டிய பிரதான சந்திகளில் சமிக்ஞை விளக்கு பொருத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஆஸ்பத்திரி வீதி சந்தி, ஆரியகுளச்சந்தி, இலுப்பையடிச்சந்தி, திருநெல்வேலிச்சந்தி உள்ளடங்கலாக பிரதான சந்திகளில் இந்த வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படுகின்றன.  

இவ்வாறு சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டாலும் அதனை பின்பற்றி போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் சந்திகளின் விஸ்தரிப்பு போதாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X