2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பொலிஸ் பிரிவில் 27 சதவீதம் விபத்து குறைவு

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பகுதிகளில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற 101 விபத்துக்களில்  13பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்பாணம் பொலிஸ் பிராந்திய போக்குவரத்து புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஜனவாரி மாதத்தில் இருந்து டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இவ் விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு பதிவாகியுள்ள புள்ளி விபரத்தகவலின்படி 21 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, 2014ஆம்  139 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 18 மரணம் விளைவிக்கப்பட்ட வாகன விபத்து சம்பவங்களும்   41 பாரிய விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

இந் நிலையில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற 139 விபத்துக்களுடன் ஒப்பிடுகையில், கடந்த வருடம் 2015ஆம் ஆண்டு  27 சதவீதம் விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிபோக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே இவ்விபத்துக்கள் இடம்பெற காரணமாகும்.

இவ் வருடம், விபத்து அற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்குவோம் என்ற கருப்பொருளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவர்கள் மீது பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X