Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்திர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
யாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில், இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாக சந்தித்த எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தனது கவலையை தெரிவித்ததோடு, இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்மதுடன் தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில், பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
46 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
7 hours ago