2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழில் கழிவகற்றல் ஆரம்பம்

George   / 2016 நவம்பர் 16 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் கடந்த 9 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு, உள்ளுராட்சி அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து, செவ்வாய்க்கிழமை (15) மாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து புதன்கிழமை (16) முதல், யாழ். நகரப்பகுதியில் கழிவகற்றல் செயற்பாடுகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ். மாநகர சுகாதார ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி கடந்த 7ஆம் திகதி தொடக்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்நதனர். இதனால், யாழ். நகரில் கழிவகற்றல் செயல்முறை ஸ்தம்பித்து கழிவுகள் தேங்கிய நிலையில் காணப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (15) யாழ். மாநகரசபை ஆணையாளர், உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இதில் 90 நாட்களுக்குள் நிரந்தர நியமனம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இன்று முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்பியுள்ள நிலையில் யாழ் நகர பகுதியில் துரிதகதியில் கழிவகற்றப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X