2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் சர்வதேச அகிம்சை தினம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். இந்து கல்லூரியில் சர்வதேச அகிம்சை தினம் வெள்ளிக்கிழமை (02) கொண்டாடப்பட்டது/

இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழில் சர்வதேச அகிம்சை தினம் கொண்டாடப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், இந்திய துணைத்தூதர் கொன்ஸலாட் ஜெனரல் ஆ.நடராஜன், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன், தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .