Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஸ்ரீரங்காவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவுவிழா, நாளை வியாழக்கிழமை (24) நடைபெறவுள்ள நிலையில், அந்நிகழ்வுக்கு கலந்துகொள்ள வரும் ஸ்ரீரங்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
'ரங்காவின் பிரசன்னத்தை எதிர்க்கும் யாழ். இந்து சமூகத்தை ஆதரிப்போம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரத்தின் கீழ்ப் பகுதியில் யாழ்ப்பாணச் சமூகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சூழவுள்ள வீடுகளுக்குள் இந்த துண்டுப்பிரசுரங்கள் எறியப்பட்டுள்ளன. ரங்கா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
5 hours ago