2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘ரயிலைக் குடிமனை பகுதிக்குள் கவிழ்க்க சதி?’

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மல்லாகம் பகுதியில், ரயிலைக் குடிமனை உள்ள பகுதிக்குள் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதா எனும் கோணத்தில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மல்லாகத்துக்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் உள்ள வளைவொன்றில், தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு கிளிப்புகளை, இனந்தெரியாத நபர்கள், வெள்ளிக்கிழமை (29) இரவு அகற்றியுள்ளனர்.

இதையடுத்து, விரைந்து செயற்பட்ட ரயில் திணைக்கள அதிகாரிகள், கிளிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில், வேறு கிளிப்புகள் பொருத்தி, தண்டவாளத்தை சீர்செய்தனர்.

இந்தக் கிளிப்புகள் அகற்றப்பட்டமையால், அவ்விடத்தில் ரயில் தடம் புரளும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த தண்டவாளத்துக்கு அண்மையில், குடிமனைகள் பல இருப்பதாகவும் அவ்விடத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டு இருந்தால், உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கலாமெனவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .