Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில்களில் பயணம் செய்பவர்களை இலக்குவைத்து அண்மைக்காலமாக சில தீய சக்திகள் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான தாக்குதலுக்கு இலக்காகிய அரச அதிகாரி ஒருவர் அண்மையில் பரிதாபமான முறையில் மரணமடைந்துள்ளார்.
அதன் பின்னரும் இவ்வாறான தாக்குதல்கள் தொடருவதால், பயணிகள் பலர் மிகுந்த அச்சத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் இதனைத் தடுத்த நிறுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், ரயில்களின் மீது - குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து ரயில்கள் மீது இனந்தெரியாத நபர்கள் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
இச் செயற்பாடானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பார்க்கும்போது இது ஒரு திட்மிட்ட செலாகுமென்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.
இவ்வாறானதொரு தாக்குதல் காரணமாக அண்மையில் உதவிக் கல்விப் பணப்பாளரொருவர் பரிதாபமான முறையில் மரணத்தைத் தழுவியதை நாம் அறிவோம்.
எனினும், இவ்வாறானதொரு ஆபத்து ஏற்பட்டதன் பின்னர்கூட இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. தொடரும் இத் தாக்குதல்கள் காரணமாக பயணிகளில் பலர் படுகாயமடைந்து வருகின்றனர் என்பதுடன், ரயில் பெட்டிகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பயணிகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டிய இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பிரதமரிடம் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கதாகும்.
5 minute ago
13 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
25 minute ago