2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி வயோதிபர் படுகாயம்

George   / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கடந்தபோது, ரயில் மோதியதில்  படுகாயமடைந்த வயோதிபர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (27) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேயிடத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி முருகேசு (வயது 75) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

தினசரிப் பத்திரிகை வாங்குவதற்காக கடைக்குச் சென்றுவிட்டு, ரயில் கடவையைக் கடக்கும் போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இவர், முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .