2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ரூ.34 மில். பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 07 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மாதகல் கடற்பரப்பில் 6.94 கிலோகிராம் தங்கக்கட்டிகளுடன், 2 சந்தேகநபர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கக்கட்டிகள், சுமார் 34.5 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை.

சந்தேகநபர்கள், தங்கக்கட்டிகளை இந்தியாவுக்குக் கடத்த முற்பட்ட வேளையில், கடற்படையினர் இவர்களைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X