2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

லண்டனுக்கு அனுப்புவதாக பணமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 மே 19 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனிலுள்ள தனது சகோதரருடைய சுப்பர் மாக்கெட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 20 பேரிடம் தலா 2 இலட்சம் ரூபாயை மோசடி செய்த கிண்ணிய, ஆலங்கேணியைச் சேர்ந்த சந்தேகநபரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், நேற்று புதன்கிழமை (17) உத்தரவிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 பேரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி தலா 2 இலட்சம் ரூபாய் வாங்கிய மேற்படி நபர், 20 பேரையும் வவுனியா அழைத்துச் சென்று கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுத்துவிட்டுத் தலைமறைவாகினார்.

ஏமாற்றமடைந்தவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் முறைப்பாடு செய்தனர். இதனடிப்படையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 9 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. 

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மோசடியுடன் தொடர்புடையவர் என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பெண்ணொருவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அந்தப் பெண், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அந்தப் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X