Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில் சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது நேற்று (03) வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகத்தர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கியின் பின் பக்க மதிலால் ஏறி குதித்து வந்த நால்வரே தன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தனது கைத்தொலைபேசியையும் அபகரித்து சென்றதாக பொலிஸாரிடம் தாக்குதலுக்கு இலக்கானவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .