Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சுன்னாகம் மின்சார நிலைய வீதியிலுள்ள யாழ்.லங்கா சித்த ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியை பரிபாலிக்கும் வட இலங்கை சுதேச வைத்திய சபையின் 90ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் சபையின் தலைவரும், யாழ்.பிரதேச முன்னாள் மருத்துவப் பதிவாளருமான டாக்டர் எஸ்.ஸ்ரீவிக்கினேஸ்வரா தலைமையில் யாழ்.சிவன் பண்ணை வீதியில் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது பிரஸ்தாப சபையின் புதிய தலைவராக வைத்தியரும் மரண விசாரணை அதிகாரியுமான க.திருலோகமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். உபதலைவராக வைத்தியரும் ஸ்ரீ லங்கா பாரம்பரிய வைத்தியர்களின் இணைத் தலைவருமான எஸ்.செல்வமகேந்திரனும் செயலாளராக வைத்தியர் இ.சற்குருநாதனும் உபசெயலாளராக வைத்தியர் எ.ஜெயக்குமாரும் பொருளாளராக வைத்தியர் எஸ்.செல்வலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025