Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 14 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
தேசிய மட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வடக்கு மாகாணத்தின் தாய் - சேய் மரண வீதமும் குடிப்பேற்று மரண வீதமும் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எனவே, இவ்வாறான நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, தாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், வடக்கு மாகாணத்தில், மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதாகவும், இதுவும் தாய் - சேய் மரண வீதம் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில், தாய் மரண வீதத்தையும் சேய் மரண வீதத்தையும் குடிப்பேற்று மரண வீதத்தையும் குறைப்பதன் மூலமே, வடமாகாண மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்க முடியுமெனத் தெரிவித்த அவர், இதன் மூலம், தேசிய மட்டத்திலும் மேற்படி மரண வீதங்களைக் குறைப்பதற்கு தங்களாலான பங்களிப்பை வழங்க முடியுமெனவும் கூறினார்.
அத்துடன், யுத்தத்துக்குப் பின்னர், வடக்கு மாகாணத்திலுள்ள தாய் - சேய் நிலையங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு, யுனிசெப் நிறுவனம் பல்வேறு வழிகளிலும் தங்களுக்கு உதவி செய்துள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
30 minute ago
34 minute ago
36 minute ago